சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டி!

வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு அவர் பயணமாகிறார்.
இவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
மேலும் இவர் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
மேலும் கிரிக்கெட், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் எல்லே விளையாட்டுகளில் சிறந்த வீரராக விளங்கியுள்ளார்.
குறிப்பாக, மெய்வல்லுநர் விளையாட்டுகளில் முப்பாய்ச்சல் நீளம் பாய்தல் போட்டிகளில் நீண்டகால சாதனையாளராகவும் விளங்கியுள்ளார்.
அத்துடன் விளையாட்டு விழாக்களை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்துவதில் திறமையானவராகவும், வடமாகாண விளையாட்டு துறையை சிநேகபூர்வமான அணுகுமுறை மூலம் வளர்த்தெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



