Sports
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற கௌதம் கம்பீரின் சாதானையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.