News
இந்தியாவின் மின்சார வாகன மானியங்களுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா முறைப்பாடு

மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, இந்தியா மானியம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், உலக வர்த்தக அமைப்பில், சீனா முறைப்பாடு அளித்துள்ளது.
உள்நாட்டு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை திட்டங்களை இந்திய மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சீன நிறுவனங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் பதிலளித்துள்ள இந்தியா, “சீனா சமர்ப்பித்துள்ள முறைப்பாடு குறித்து மத்திய அமைச்சகம் முழுமையாக ஆராயும்” எனத் தெரிவித்துள்ளது.




