மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு.

மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை வெகு விமர்சையாக கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.கல்லூரியின் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மயோன் குழும நிறுவனத்தின் பணிப்பாளர், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம்.றிஸ்லி முஸ்தபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.
மயோன் சமூக சேவைகள் அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட பாடசாலை பை, அப்பியாச புத்தகங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு பரிசாக றிஸ்லி முஸ்தபா அவர்கள் வழங்கி வைத்தார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் சாஜீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர் ஜெமீல், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




