Sri Lanka News
டயானா கமகேவுக்கு பிடியாணை உத்தரவு!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, அவரைக் கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (21) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையகத் தவறியதால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதியான டயானா கமகேயின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.