NewsWorld News
NDTV உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்

NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்து கொள்ள உள்ளார்.
இந்த மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது.
அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


