News

ஊடகவியலாளர் சுலைமான் றாபி மனித வள முகாமைத்துவத்தில் Diploma பட்டம் பெற்றார்.

நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுலைமான் றாபி, மனித வள முகாமைத்துவத்தில் (Diploma in HRM) டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

இன்றைய தினம் (04) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற Great Minds Campus நிறுவன வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வின் போதே இவர் இதனைப் பெற்றுக் கொண்டார்.

சர்வதேச அங்கீகாரமிக்கதும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடனும் மனித வள டிப்ளோமா (Diploma in HRM) பயிற்சி நெறியை, Preah Sihamoniraja Buddhist University (PSB University International) — இணைந்து Great Minds Campus கல்வி நிறுவனத்தின் முலம் தொடர்ந்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை – எம்.ஐ. லத்திபா ஆகியோர்களின் சிரேஷ்ட புதல்வரான ஊடகவியலாளர் சுலைமான் றாபி, அகில இலங்கை சமாதான நீதவானாகவும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிந்தவூர் குறூப் நிருபராகவும், கடமையாற்றி வருகின்றார்.

நிந்தவூர் இமாம் ஹஸ்ஸாலி பாடசாலையில் ஆரம்பக்கல்வியை பயின்ற இவர், தனது உயர்கல்வியை நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் கற்றதோடு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தரம் 01இன் முகாமைத்துவ உதவியாளராகவும், அக்கரைப்பற்று மேலதிக மாகாண பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இதேவேளை ஊடகவியலாளர் சுலைமான் றாபி, கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியில் அதி உயர் சித்திபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் சுலைமான் றாபியின் பயணங்கள் சிறப்பாக அமைவதற்கு எனது சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button