News

அரிசி மாபியா சோதனையில் பல மில்லியன் வருவாய் ஈட்டியது இலங்கை

அரிசி மாபியாவை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட அரிசி சோதனைகளின் எண்ணிக்கை 2,800 ஆகும்.

இவற்றில், 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பான சோதனைகள் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்து இருப்புகளை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை அடையாளம் காண அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button