Sports

ஆப்கானுடனான ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

இந்த மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 8 ஆம் திகதி அபுதாபியில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் ஒரு முக்கியமான ஆயத்தமாக இருக்கும்.

அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் காயம் காரணமாக மீண்டு வருவதால் இந்த அணியில் இடம்பெறவில்லை.

அதே நேரத்தில் சக துடுப்பாட்ட வீரர், நூருல் ஹசன் 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் தொடரின் அனைத்து போட்டிகளின் போதும், சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் அணியை வழிநடத்துவார்.

பங்களாதேஷ் அணி;

மெஹிடி ஹசன் மிராஸ் (தலைவர்), தன்சித் ஹசன், மெஹமட் நயிம், சைஃப் ஹாசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தோஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், தஸ்கின் அகமட், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன், ஹசன் மஹ்மூத் மற்றும் நஹித் ராணா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button