விசேட தேவையுடைய சிறுவர்களுடன் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு

ஸ்கை தமிழ் இதயம் செயற்திட்டம் ஏற்பாட்டில், நீர்கொழும்பு அல் ஜன்னாஹ் விஷேட தேவையுடைய குழந்தைகள் மையத்தில் வியாழக்கிழமை (02) சிறுவர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரான ஜே.எம் பாஸித் அவர்களின் வழிகாட்டலில், ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிரதி முகாமையாளர் திருமதி. ஆஷிகா பர்ஸான் தலைமையில் நடைபெற்றது. மேலும், அல் ஜன்னாஹ் நிலையத்தின் பணிப்பாளர் சப்ரி முஹம்மட், அதிபர் திருமதி.சுல்பா, ஸ்கை தமிழ் உறுப்பினர் இல்ஹாம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சி பகிர்ந்ததோடு, மாணவர்களின் கலைநிகழ்வுகள், ஓவியப்போட்டிகள் நடாத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் மதிய உணவும் இனிப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. மேலும், நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு தேவையுடைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக ரூ.70,000 மதிப்பிலான டயப்பர்களும் ஸ்கை தமிழ் ஊடகம் அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







