சம்மாந்துறை: கைர் ஜும்மா பள்ளியில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு!


✍️மஜீட். ARM
சமீபத்தில் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று கைர் ஜும்மா பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை மற்றும் வரவேற்பு
பள்ளியின் நிர்வாகத் தலைவர் அல் ஹாபிழ் றமிஸ் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதிதாகத் தேர்வான பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டு, பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளியின் பொறுப்பு நம்பிக்கையாளரும், ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம். எஸ். அப்துல் மஜீத் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில், நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து, பிரதேசத்தின் வளர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.
இந்நிகழ்வின் இறுதிக் கட்டமாக, பள்ளியின் இமாம் மௌலவி றிஸ்வின் அவர்கள், சம்மாந்துறை பிரதேசத்திற்கும், அங்கு வாழும் மக்களுக்கும் அனைத்து நன்மைகளும் உண்டாக வேண்டி விசேட துஆ பிரார்த்தனை செய்தார்.
சமூக நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளை கௌரவிப்பதன் மூலம், பிரதேச வளர்ச்சிக்கான நல்லுறவை பலப்படுத்த இந்நிகழ்வு உதவியது.




