இரு இளைஞர்களின் உயிரை பறித்த அதிவேகம்

அநுராதபுரம் – ஹொரவபொத்தனை – கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹொரவபொத்தனை, கட்டுவரகொல்லேவ மற்றும் நெலுகொல்லேவ பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய பாத்ல சிஹான் மற்றும் பிரவீன் காவிந்த இலங்க சிங்ஹ ஆகிய இரு
இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளின் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




