News

இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிக்க இதுவே காரணம் -வெளியான அறிவிப்பு

நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டி ஆகியவை அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் மாத்திரம், மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற நிலையில் உள்ளது.

இதன் விளைவாக மாதத்திற்குக் கூடுதலாக 100 யூனிட்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார்.

குறைந்த செயற்திறன் கொண்ட சாதனங்களின் இறக்குமதியை அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகள் மீதான சட்டத்தைக் கடுமையாக்கும் என்றும் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button