News
கம்பஹா காட்டுப்பகுதியிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

கம்பஹாவில் கந்தவல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (01) கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.