Sri Lanka News
நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) நடைபெற்ற நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.



