Sri Lanka News
இ.போ.ச பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்களை அறியப்படுத்த இலக்கங்கள் அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு பாதுகாப்பான மற்றும் திறமையான பொது போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த விடயங்களை 070 477 5030 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது 1958 என்ற துரித இலக்கம் அல்லது www.sltb.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிவிக்க முடியும்.




