News
கமாண்டோஸ் பாடநெறி – பட்டமளிப்பு விழா

கமாண்டோஸ் பாடநெறி எண். 52 A & B இன் பட்டமளிப்பு விழா ஒகஸ்ட் 20ஆம் திகதியன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடநெறியை முடித்த மொத்தம் 7 அதிகாரிகள் மற்றும் 78 வீரர்கள் தங்கள் கமாண்டோ பதக்கங்களைப் பெற்றனர்.
கமாண்டோக்களின் அடையாளம் மற்றும் தொழில்முறை பெருமையை அடையாளப்படுத்தும் வகையில், பிரதம விருந்தினர் மெரூன் பெரெட்களையும் வழங்கினார்.
இதன்போது சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.









