தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்?

அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-01-2026) தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிகரான பலன்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன? இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுவது என்ன?




