SCORPIONS CUP 2025: சம்மாந்துறை கிங்ஸ் லெவன் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

✍️மஜீட். ARM
அக்கரைப்பற்று மைதானத்தில் நேற்று செப்டம்பர் (13) நடைபெற்ற “SCORPIONS CUP 2025” கடின பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில், சமமாந்துறை கிங்ஸ் லெவன் அணி, மாவடி பேர்ல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சமமாந்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம், கிங்ஸ் லெவன் அணி, கிரிக்கெட் உலகில் தங்களால் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.பரபரப்பான இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மாவடி பேர்ல்ஸ் அணி, சம்மாந்துறை அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் சிக்கி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்த இலக்கை எளிதாக அடைந்துவிடலாம் எனத் தோன்றினாலும், இறுதிப் போட்டி என்பதால் இரு அணிகளும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை கிங்ஸ் லெவன் அணி, மாவடி பேர்ல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு ஈடுகொடுத்து, 18.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.
சமமாந்துறை மண்ணில் கடின பந்து கிரிக்கெட் மைதானம் இல்லாத நிலையிலும், பல்வேறு திறமையான அணிகளுக்கு மத்தியில் கிங்ஸ் லெவன் அணி இந்த வெற்றியைப் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி, அணியின் அயராத உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துகிறது.(சோசியல் டிவி வாழ்த்துக்கள்)வெற்றி பெற்ற சம்மாந்துறை கிங்ஸ் லெவன் அணிக்கு, வெற்றிக் கோப்பையுடன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (1,50,000/=) பணப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த வெற்றியானது, எதிர்காலத்தில் சம்மாந்துறை வீரர்கள் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெற்ற சம்மாந்துறை கிங்ஸ் லெவன் அணிக்கு எமது சோசியல் டிவி வாழ்த்துக்கள்.





