News

விடுமுறை நாட்களை கொண்டாட நுவரெலியா நகரில் குவியும் சுற்றுலா பயணிகள்!

(வி.தீபன்ராஜ்)

நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.

இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும் நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் நபிகள்நாயகம் பிறந்த தினம் வெள்ளிக்கிழமை அமைத்தமையால் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை அமைந்ததால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகர் ஹக்கல பூங்கா , விக்டோரியா பூங்கா, கிரகறி பூங்கா, கிறகறி வாவி கரையிலும்,வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றன. அத்தோடு நுவரெலியா கிறகரி வாவி கரையில் அமைக்கப் பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும், மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை , நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் வாகனங்கள் அணிவகுந்து ஊர்ந்து செல்கின்றன இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி, நகர்ப்பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து பொலிஸாரை பணியில் அமர்த்தி போக்குவ‌ர‌த்து நெரிச‌லை துரித‌மாக‌ சீர் செய்து வருகின்றனர் அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button