Sports

பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகள் : 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2 – 1 என கைப்பற்றியது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2 ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3 ஆவது ஒருநாள் போட்டி இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button