News

வீரர்களின் பல்கலைக்கழகம் தெரிவான பிள்ளைகளுக்கு இராணுவத்தினால் மடிக்கணினிகள் விநியோகம்

இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம், தற்போது சேவையிலுள்ள இராணுவ வீரர்களின் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு மடிக் கணினிகளை விநியோகிப்பதற்காக, இராணுவத் தலைமையகத்தில் 2025 ஒகஸ்ட் 12 ஆம் திகதி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை எற்பாடு செய்திருந்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 57 மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

தற்போது சேவையில் உள்ளவர்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வித் துறைகளில் அவர்களுக்குத் தேவையான தொழிநுட்ப வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளி பிள்ளைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button