நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்.!

நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி முழுவதும் இருண்ட காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா நகர எல்லை, ஹவா எலியா பொரலந்த உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிலிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால், மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், தமக்கு முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலையில் வாகன சாரதிகள் வாகனத்தின் மின் விளக்குகளை ஏற்றுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.