News
48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது

காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 5 நாட்களுக்குள் 48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
5 நாட்களில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,027 ஆகும்.
அவர்களில், 2,998 பேர் ஹெராயின், ஐஸ், ஹாஷ், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது