ஹோட்டல் உரிமையாளர்களுடன் தவிசாளர் நகரசபையில் கலந்துரையாடல்.

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடனான சந்திப்பு தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் தலைமையில் இன்று கிண்ணியா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் அஜீத் அவர்கள் நகர சபை செயலாளர், வர்த்தக சங்க பிரதி நிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் சுற்றுலா துறையின் மேம்பாடு, சுகாதாரத்தை பேணுதல் , போசாக்கின் தரத்தை மேம்படுத்துதல், ஹோட்டல் ஊழியர்களின் சீருடைகள், கழிவுகள் வெளியேற்றம், நோய்த்தொற்று, மேற்பார்வை, சட்ட நடவடிக்கை, வர்த்தக அனுமதி, விலை நிர்ணயம், போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் விரிவாக ஆராயப் பட்டன.
எதிர்காலத்தில் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கிண்ணியா நகர சபையும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடு படுவதோடு சட்ட நடவடிக்கைகளும் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும் என்கின்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.