News

உள்ளூரில் பொருத்தப்பட்ட 3000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸில் பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 3000 எரிவாயு அடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனையின் போது இவை பறிமுதல் செய்யப்பட்டது.

தயாரிப்புகள் தேவையான தரங்களை பூர்த்தி செய்கின்றனவா என்பதை தீர்மானிக்க சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button