டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம் தம்புள்ளையில்

2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது
இந்த பிரசார நிகழ்வு ஓகஸ்ட் முதலாம் மற்றும் 2 ஆம் திகதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 7 மணி வரை தம்புள்ளை பிரத்தியேக பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகள் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ், மத்திய வங்கி நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
பணத்திற்கு பாதுகாப்பான, மிகவும் வசதியான மற்றும் திறமையான மாற்றான டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான அறிவு மற்றும் அனுபவத்துடன் இலங்கையர்களை மேம்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.