World News
வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால ஜனாதிபதியாக ஹான் டக் சூ (Han Duck-soo) நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் (Lee Jae-myung) வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றப்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லி ஜே மியுங், வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, வடகொரியா அத்துமீறி செயல்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ நட்பு மூலம் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்