World News
கொண்டாட்டத்தில் சர்வதேச கோமாளிகள் வாரம்

சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.
எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
இது கொண்டாட்டத்தின் வாரமாக காணப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள கோமாளிகள், மக்களை சிரிக்க வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஓகஸ்ட் 1 முதல் 7 வரை சர்வதேச கோமாளி வாரம் கொண்டாடப்படுகிறது.
தன்னார்வ நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கோமாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன்படி, உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, கோமாளிகள் வாரத்தை கொண்டாடி வருகின்றனர்.