India NewsWorld News

ஏமனில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி.!!

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை (16) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் அவரை காப்​பாற்ற இந்திய மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்​கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரி​யாவை காப்​பாற்ற மத்​திய அரசு சார்​பில் அனைத்து முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​பட்​டன. நிமிஷா​வின் குடும்​பத்​தினர் ஏமனில் முகாமிட்டு உள்​ளனர். அவர்​களுக்கு மத்​திய அரசு உறு​துணை​யாக இருக்​கும்’’ என்றார்.

பின்னர் நீதிப​தி​கள் கூறும்​போது, “ஏமன் சிறை​யில் நிமிஷா பிரியா உள்​ளார். நாங்​கள் எந்த உத்​தரவு பிறப்​பித்​தா​லும் அதனால் எந்த பலனும் இல்​லை. நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படக்​கூ​டாது என்று விரும்​பு​கிறோம். வழக்​கின் அடுத்த விசா​ரணை ஜூலை 18-க்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது” என்று தெரி​வித்​தனர்.

ஷரியா என்​றழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாக கருதப்​படு​கிறது. எனவே, பிரியா குடும்​பத்​தினர் சார்​பில் உயி​ரிழந்த மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்​வந்​துள்​ளனர்.
அதை மெஹ்தி குடும்​பத்​தினர்​ ஏற்பார்களா என்​பதற்​கு இதுவரை விடை கிடைக்​கவில்​லை.

இதேவேளை, கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

நாளை ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button