World News

நாங்கள் ஈரானை அழிக்க விரும்பவில்லை, சவூதி அரேபியாதான் விடாப்புடியாக உள்ளது!

நாங்கள் ஈரானை அழிக்க விரும்பவில்லை, சவூதி அரேபியாதான் விடாப்புடியாக உள்ளது!

-ட்ரம்பின் ஆலோசகர் தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் குறித்த சவூதி அரேபியாவின் உண்மையான நிலைப்பாட்டை ட்ரம்பின் ஆலோசகர் வெளிப்படுத்தியுள்ளார்.

“சவூதியர்கள் மார்க் லெவினைப் போலவே தெரிகிறார்கள். ஈரானை இப்போதே வரைபடத்திலிருந்து துடைத்தெறிந்து, அமெரிக்கா இந்த வேலையை முடித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

“ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை.” என்றார்.

டொனால்ட் ட்ரம்பின் ஒரு ஆலோசகர் Axios-க்கு அளித்த பேட்டியிலேயே, சவுதி அரேபியா ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக “முடித்து விட வேண்டும்” என்று விரும்புவதாகவும், ஈரானை “உலகிலிருந்து அழித்துவிட வேண்டும்” என்னும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

ட்ரம்ப் ஆலோசகர்கள் (ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் போன்றோர்) ஈரான் உடன் பேச்சுவார்த்தை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி ஈடுபட்டுள்ளனர்.

சவுதி பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கருத்து ட்ரம்ப் நிர்வாகத்துக்குள் உள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது.

சவூதிகள் கடுமையான நிலைப்பாட்டில் இருக்க, அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button