World News

பறந்துகொண்டே திருமணம் செய்த பணக்கார ஜோடி!

விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து இவ்வாறு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, திருமண உடையில் மணமக்கள் விமானம் ஏறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் மணமக்கள் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அதன் பின்னர் விமானத்தில் ஏறிய மணமக்கள் உள்ளே தங்களது விருந்தினர்களுடன் திருமணத்தை கொண்டாடினர். விமானத்தின் உட்புறத்தில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பர நட்சத்திர ஹோட்டலாக விமானம் மாறுபட்டிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

விமானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு வானத்தில் தங்களது காதலை உறுதி செய்தனர்.

இதனை வீடியோவாக எடுத்து “காற்றில் காதல் உள்ளது” என்ற தலைப்புடன் பியோனா & சாம் என்ற ஜோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button