World News

கத்தார் வான்பரப்பு மூடல்: வெளிநாடுகளில் சிக்கிய பயணிகளுக்காக கத்தார் ஏர்வேஸ் விசேட விமானங்கள்!

பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் கத்தார் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள பயணிகளுக்காக இன்று (மார்ச் 5) முதல் சில விசேட விமானங்களை இயக்கவுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, மஸ்கட்டில் இருந்து லண்டன் ஹீத்ரோ, பேர்லின், ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கும், ரியாத்தில் இருந்து பிராங்பேர்ட் நகருக்கும் விசேட விமானங்கள் பறக்கவுள்ளன.

விமான நிறுவனத்திடமிருந்து உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்காதவர்கள் விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகுதியான பயணிகளை நிறுவனம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பயண விபரங்களை வழங்கும்.

வான்பரப்பு மீளத் திறக்கப்பட்டதும் வழமையான சேவைகள் ஆரம்பமாகும்.

இது குறித்த மேலதிக விபரங்கள் நாளை (மார்ச் 6) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button