Home இலங்கைச் செய்திகள்ஹரக் கட்டா வழக்கின் அதிரடி திருப்பம்: கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!

ஹரக் கட்டா வழக்கின் அதிரடி திருப்பம்: கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!

by Mohamed Siraj
0 comments

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான அரச சட்டவாதியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

banner

You may also like

Leave a Comment