Home இலங்கைச் செய்திகள்கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

by Nabishad
0 comments

கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த​ தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று (17) இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தொலைபேசி வழியே தொடர்புகொண்டதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இதற்கமைய, ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தாம் தீர்மானித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

banner

இன்று தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் வழமை போல் கடமைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

You may also like

Leave a Comment