Home இலங்கைச் செய்திகள்டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இனி வரி விதிக்கப்படும்!

டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இனி வரி விதிக்கப்படும்!

by Nabishad
0 comments

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி விதிக்கப்படாது என அத தெரண BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய குறிப்பிட்டார்.

டிஜிட்டல் ஊடகம் அல்லது ஏனைய வழிமுறைகள் ஊடாக சேவைகளை ஏற்றுமதி செய்து ஈட்டப்படும் வருமானத்திற்கு அதிகபட்சமாக 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கமைய, டிஜிட்டல் ஊடகங்கள் ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள், தாம் ஈட்டும் வருமானத்தை சுயமதிப்பீட்டு வரி அறிக்கையின் மூலம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

banner

சாதாரண வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி வீதங்களுடன் ஒப்பிடுகையில் சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு குறைந்த வரி வீதமே பொருந்தும் என்றும், அந்த 15 சதவீத வரியைச் செலுத்துவது டிஜிட்டல் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாக சேவை ஏற்றுமதியின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் பொறுப்பாகும் என்றும் ஹிரான் மெனேரிபிட்டிய மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய,

2025 – 2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம் வரிக்கு உட்படுத்தப்படுகிறது.

எனினும், அது சாதாரண வரி வீதங்களின் கீழ் 18, 24, 30, 36 சதவீதம் வரையிலான வீதத்தில் வரிக்கு உட்படுத்தப்படாது.

டிஜிட்டல் ஊடகம் அல்லது ஏனைய வழிகளில் சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம் தற்போது அதிகபட்சமாக 15% வரிக்கு உட்படுத்தப்படுகிறது.

எனவே, தற்போது டிஜிட்டல் ஊடகம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு உண்மையிலேயே ஒரு பொறுப்பு உள்ளது.

அவ்வாறு ஈட்டப்படும் வருமானத்தை அவர்களின் சுயமதிப்பீட்டு வரி அறிக்கை மூலம் சமர்ப்பித்து, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்குக் குறைந்த அளவு வரியே விதிக்கப்படுவதால், அந்த 15% வரியைச் செலுத்தும் பொறுப்பு டிஜிட்டல் ஊடக வழிமுறைகள் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்குப் பொருந்தும்.

அத்துடன் அவர்கள் அது தொடர்பாக வரி செலுத்துவதற்குக் கடமைப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment