16
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு அமைந்ததிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என குற்றம்சாட்டினார்.
காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லை எனக் கூறும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வாங்க முடிவு செய்திருப்பதாகவும் உதயநிதி விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை அரசு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

