தேசிய வலைப்பந்தாட்ட அணிக்குள் நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒழுங்கீனமான நடத்தைகளே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழக்கக் காரணம் என முன்னாள் அணித்தலைவரும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் தமயந்தி ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆசிய வலைப்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரின் போது, மூத்த வீராங்கனைகள் சிலர் இளநிலை வீராங்கனைகளைப் தகாத வார்த்தைகளால் தூற்றியதாகவும், இதனால் இளம் வீராங்கனைகள் மனமுடைந்து போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணித் தேர்வின் போதே பயிற்றுவிப்பாளர், வீராங்கனைகளிடையே பிளவுகளை ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டிய அவர், போட்டித் தொடருக்கு முன்னரே திறமையான மூன்று இளம் வீராங்கனைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷங்காயில் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரை நிறைவுசெய்து கொண்டு தேசிய அணி நேற்று கொழும்பு திரும்பிய நிலையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

