Home இலங்கைச் செய்திகள்ரூ.5 லட்சம் இலஞ்சம் வாங்கிய 4 பொலிஸார் கைது! கஞ்சா தோட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க பேரம்!

ரூ.5 லட்சம் இலஞ்சம் வாங்கிய 4 பொலிஸார் கைது! கஞ்சா தோட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க பேரம்!

by Nabishad
0 comments

தனமல்வில, நிகவெவ தெமோதர தடாகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், மொனராகலை பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் புத்தலையைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், பிபிலையைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் பிபிலையைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர்.

தனமல்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஓகஸ்ட் 11ஆம் திகதியன்று ஒரு பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியைச் சுற்றிவளைத்து சந்தேகநபர் ஒருவர் கஞ்சா தோட்டத்துடன் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் மூன்று கஞ்சா பயிர்ச்செய்கை நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, ஓகஸ்ட் 10ஆம் திகதி மொனராகலை குற்றத்தடுப்புப் பிரிவின் 06 உத்தியோகத்தர்கள் அங்கு வந்து, தன்னிடம் 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா தோட்டத்தை மட்டும் எரித்துவிட்டு எஞ்சியவற்றை எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.

banner

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நிகவெவ பகுதியைச் சேர்ந்த ‘களு’ எனப்படும் மற்றொரு நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களே கஞ்சாவை உலர்த்துமாறு தன்னிடம் கூறியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment