Sri Lanka News

3 ‘A’ சித்தி பெற்ற 8,300 பரீட்சார்த்திகள்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் 8,300 பரீட்சார்த்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

இதில் 7,477 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள், 823 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகும்.இந்த ஆண்டிற்கான பரீட்சைக்கு மொத்தம் 281,810 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button