Sports

அமெரிக்காவிலேயே விளையாட வேண்டும் – ஈரானுக்கு FIFA திட்டவட்டம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளில், ஈரானுக்கான போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுமாறு ஈரான் விடுத்த கோரிக்கைக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) பதிலளித்துள்ளது.

தற்போதைய போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களைக் கருத்திற்கொண்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், போட்டி அட்டவணையின்படி தீர்மானிக்கப்பட்ட மைதானங்களிலேயே ஆட்டங்கள் நடைபெறும் என்றும், இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, திட்டமிட்டபடி அமெரிக்காவிலேயே போட்டிகள் நடத்தப்படும் என்பதில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு உறுதியாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button