Sri Lanka News

சாமிக்கவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற பெண் விமானி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, சாமிக்க கருணாரத்னவின் இரத்த மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்ட மனு தொடர்பாக, எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.விமானி செவ்வந்தி சேனாதீர என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது பிள்ளையின் தந்தை சாமிக்க கருணாரத்ன என அறிவிக்கக் கோரியும், பிறப்பு சான்றிதழில் அவரது பெயரை சேர்க்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரியும் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சாமிக்க கருணாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்ரமநாயக்க, ஒருவரின் சம்மதமின்றி இரத்த மாதிரிகளைப் பெற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

தனது கட்சிக்காரர் மரபணு பரிசோதனைக்கு ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வந்தி சேனாதீர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, முன்னதாக காவல்துறை மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் சாமிக்க கருணாரத்ன இதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

எனவே, பரிசோதனைக்கான ஆய்வகத்தை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.

2023 காலப்பகுதியில் சாமிக்க கருணாரத்னவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அதன் மூலம் 2025 செப்டம்பர் 29 அன்று பிறந்த குழந்தைக்கு அவரே தந்தை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

சாமிக்க கருணாரத்ன, தந்தை என்ற பொறுப்பை ஏற்க மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், முறையான DNA பரிசோதனை மூலம் உண்மையை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றைக் கோரியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button