Sri Lanka News

சீன வானூர்தி மத்தலவிற்குத் திருப்பம்: கட்டுநாயக்கவில் சீரற்ற காலநிலையால் வானூர்தி போக்குவரத்து பாதிப்பு

சீனாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் (China Eastern Airlines) வானூர்தியொன்று, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்தல சர்வதேச வானூர்தி நிலையத்திற்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், கட்டுநாயக்கவிற்கு வருகை தரும் ஏனைய பல வானூர்தி தற்போது தரையிறங்கி வருகின்ற போதிலும், வானிலை மாற்றங்களினால் விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button