சம்மாந்துறையில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பகுதியில் இன்று ( ) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பகுதி மக்களால் முதலில் காணப்பட்ட இச்சடலம் குறித்து உடனடியாக சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






