Sri Lanka News

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெற விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெறுவதற்கு விசேட QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று (16) மாலைக்குள் சுற்றுலத் துறைக்கு விசேட QR முறையை அறிமுகப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புவதாகவும் கூறினார்.

சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தங்கள் பணிகளை முன்னெடுப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த விசேட QR முறை அறிமுகப்படுத்தப்படும்.

இது தொடர்பாக தேவையான அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

மேலும், பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25-30% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 352 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத வீழ்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button