Sports
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 4ஆவது போட்டி தற்சமயம் இடம் பெற்றுவருகிறது.
குறித்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
அதன்படி குறித்த போட்டியின், நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படத் தீர்மானித்தது.
அதன்படி குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சுப்மல் கில் 27 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 33 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்..
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




