Sri Lanka News
செம்புவத்தையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாத்தளை செம்புவத்தை வாவி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க உட்பட்ட பிரதிநிதிகள் அண்மையில் மேற்கொண்டுள்ளார்.
செம்புவத்தையை மிகவும் கவர்ச்சியாகமான மற்றும் வசதிகளுடனான இடமாக முன்னேற்றுவதற்கு இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அங்கு இப்பகுதிக்குச் செல்லும் வீதியை அபிவிருத்தி செய்தல் உட்பட புதிய யோசனைகள் பல தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி மிகவும் விரைவாக சகல வசதிகளுடன், புதிய அனுபவங்களை பெற்றுத்தரும் சுற்றுலாத்தலமாக எதிர்காலத்தில் செம்புவத்தையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.