அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை: சவூதி, துபாய் உட்பட 14 நாடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை உதவிச் செயலாளர் மோரா நம்தார் கூறுகையில், “பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுவதால், அமெரிக்கர்கள் அங்குள்ள வணிக ரீதியான விமான சேவைகளைப் பயன்படுத்தி உடனடியாக வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. போர்ச் சூழல் தீவிரமடைந்து வருவதால், அமெரிக்கத் தூதரகங்கள் தனது குடிமக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளன.




