Sri Lanka News
லெதண்டி தோட்டத்தில் காட்டுத்தீ – இரண்டு ஏக்கர் புற்காடு எரிந்து நாசம்!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் நேற்று மாலை 05 மணியவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் இரண்டு ஏக்கர் மானா புற்காடு எரிந்து நாசமாகியுள்ளது.
மலையகத்தில் தொடர்ந்து கடும் வெப்பம் நிறைந்த காலநிலை நிலவி வருகின்ற நிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயல் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணமுள்ளது.
ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லெதண்டி தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




