World News

பேரழிவின் விளிம்பில் தவிக்கும் உலகம்; டிரம்புக்கு கொண்டாட்டமா.?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிறகு, மேடையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதாவது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேற்று மார்ச் 27ஆம் தேதி வைட் ஹவுஸ் பால்கனியில் விவசாயிகளுக்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது, விவசாயிகளுக்கு சாதகமான கொள்கைகள் மற்றும் 1200 கோடி டாலர் நிதி உதவி பற்றி பேசியுள்ளார்.

பின்பு தனது உரையை முடித்த டிரம்ப், உடனே விலேஜ் பீப்பிள் இசைக்குழுவின் பிரபல “YMCA” பாடலுக்கு தனது வழக்கமான நடனத்தை ஆடியுள்ளார்.

எனினும் இந்த நடனம் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

ஏனெனில் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி இப்படி நடனமாடுவது பொருத்தமற்றது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி உலக அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேலும், டிரம்பின் இந்த செயல் தலைமைப் பண்பிற்கு அழகா என்ற கேள்வியும் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button